
மறுபடியும் 20 வருடம் கழித்து விஜய்க்கு ஜோடியாகும் ஜோதிகா
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தளபதி 68 படத்திலும் நடிக்கவுள்ளார்.
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
தற்காலிகமாக 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், 2024 -ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தில் யார் யார் நடிக்க போகிறார்கள், அவர்கள் என்னவாக நடிக்க போகிறார்கள் போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த படத்தில் SJ சூர்யா வில்லனாக நடிக்க போகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Thalapathy 68 New update
மூன்றாவது முறையாக விஜய் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கும் ஜோதிகா
இந்நிலையில், தளபதி 68-ன் கதாநாயகி யார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக தளபதி 68 படத்தில் நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், ஒருவேளை அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால், இது அவர்களது மூன்றாவது படமாக இருக்கும்.
குஷி: SJ சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார்.
திருமலை: 2003ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை இரமணா இயக்கினார். இதிலும் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா தான் நடித்திருந்தார். மேலும், மறைந்த நடிகர்கள் ரகுவரன், விவேக் போன்றவர்களும் இதில் நடித்திருந்தனர்.