LOADING...
'தளபதி 68' அப்டேட்: நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள்
இது 'தளபதி 68'க்கான அறிவிப்பாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.

'தளபதி 68' அப்டேட்: நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள்

எழுதியவர் Sindhuja SM
Jul 29, 2023
04:32 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையிடப்பட இருக்கிறது. நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்ற செய்தி நாம் அறிந்த ஒன்றே! தற்போதைக்கு 'தளபதி 68' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தின் பணிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, அடுத்த படத்தின் முக்கியமான அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து, இது 'தளபதி 68'க்கான அறிவிப்பாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் ட்விட்டர் பதிவு