ஜூலை 14 ஆம் தேதி, தெலுங்கில் வருகிறான் மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சென்றவாரம் வெளியான 'மாமன்னன்' திரைப்படம், பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் இடையேயும் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் வடிவேலுவின் நடிப்பும், அவருக்கு எதிராக பஹத் பாசிலின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இது உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என்பதாலும், இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியான நாள் முதல், திரையரங்குகளில் வசூலை வாரிக்குவித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சமூக அவலங்களை பிரதிபலிக்கும் மாரி செல்வராஜின் படங்களில் இதுவும் ஒரு மைல்கல் எனக்கூறுகிறார்கள். இதற்கிடையே, இப்படத்தை, தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மாமன்னன்' திரைப்படத்தின் தெலுங்கு பாதிப்பு, அடுத்த வாரம், ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.