கூலி: வெல்கம் கிங் நாகார்ஜூனா! ரஜினிகாந்துடன் இணையும் தெலுங்கு சூப்பர்ஸ்டார்
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி'. இப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், நேற்று முதல் படக்குழுவினரின் அறிமுகம் நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முதல் கேரக்டராக நேற்று சௌபின் ஷாஹிரின் கதாபாத்திரைத்தை அறிமுகம் செய்தனர். இந்த நிலையில் இன்று சைமன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிக்கிறார் என போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளார் லோகேஷ். இன்று நாகர்ஜூனாவின் பிறந்தநாளை ஒட்டி இந்த போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவரை தவிர, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் மற்றும் மஹேந்திரன் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.