
வீட்டு பணிப்பெண்ணுக்காக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பதிவிட்ட வீடியோ வைரல்
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் பாலோயர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, வீடியோ பதிவிட்டு உதவியது தற்போது வைரலாகி வருகிறது.
பணிப்பெண்ணுடன் அல்லு அர்ஜுன் பதிவிட்டுள்ள வீடியோவில், பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சிறந்த வீடியோவை செய்யலாம் என அவர் கூறுகிறார்.
பின், அந்த பெண்ணிடம் எவ்வளவு பாலோயர்கள் உள்ளார்கள், எவ்வளவு வேண்டும் என கேட்கும் அல்லு அர்ஜுன், இந்த வீடியோ மூலம் அவர் எதிர்பார்க்கும் பாலோயர்கள் கிடைப்பார்கள் என நம்புவதாக தெரிவிக்கிறார்.
மிகப்பெரிய நடிகரான அல்லு அர்ஜுன், தன் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் பாலோயர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அவருடன் வீடியோ வெளியிட்டது இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பணிப்பெண்ணுக்காக வீடியோ பதிவு செய்த அல்லு அர்ஜுன்
Icon star @alluarjun’s beautiful gesture is winning hearts all over! 🤩#AlluArjun recorded a reel video with a girl who’s working as a maid in his house, as she wished to gain followers.@DoneChannel1 pic.twitter.com/NwZBFhCIJN
— Ramesh Bala (@rameshlaus) November 30, 2023