Page Loader
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை
நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 17, 2023
01:20 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு திரைப்படவுலகில், 'சூப்பர்ஸ்டாராக' கருதப்படுபவர் சிரஞ்சீவி. அவரது அபாரமான நடன திறமை அவரின் ரசிகர்கள் கட்டிபோட்டுள்ளது எனலாம். அதேபோல் அவரின் மகனான ராம்சரணும், சிறப்பாக நடனமாடுவார். இந்தாண்டு ஆஸ்கார் விருதை வென்ற RRR படத்தின் 'நாட்டு கூத்து' பாடலே அதற்கு சாட்சி. நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில், 'போலோ சங்கர்' என்ற படத்தில் நடித்திருந்தார். சென்ற வாரம் வெளியான அத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் வெளியான 'வேதாளம்' படத்தின் ரீமேக் தான் 'போலோ சங்கர்'. இதற்கிடையில், அந்த வெற்றியை கொண்டாட முடியாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம் சிரஞ்சீவி. அவருக்கு, டெல்லியில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில், மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் சில நாட்கள் அவர் ஓய்வில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post