
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிறாரா நாகசைதன்யா?
செய்தி முன்னோட்டம்
நடிகை சமந்தாவின் மாஜி கணவரும், தெலுங்கு திரையுலகின் ஹீரோவுமான நாகசைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாகசைதன்யா, GVM இயக்கத்தில் வெளியான 'ஏ மாயா சேசாவே' படத்தில் நடிக்கும் போது சமந்தாவுடன் பழக ஆரம்பித்து, பின்னர் இருவரும் பலவருட காதலுக்கு பின்னர், 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணம், யார் கண்பட்டதோ தெரியவில்லை, கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்த இந்த செய்திக்கு பின்னர், இருவரும் தத்தமது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்த துவங்கினர்.
card 2
நடிகை ஷோபிதாவுடன் காதல்?
விவாகரத்திற்கு பின்னர், நாகசைதன்யா, நடிகை ஷோபிதாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இருவரும் லண்டனில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமே அதற்கு காரணமாக அமைந்தது.
இருவரும், இந்த செய்தியை வதந்தி எனக்கூறி மறுத்து வந்தனர். இந்நிலையில், நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்தி வைக்க அவரின் தந்தை நாகார்ஜூனா முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சினிமாத்துறையை சாராத ஒரு வணிக குடும்பத்து பெண்ணை தன் மகனுக்கு பார்த்துள்ளதாகவும், அவரை தான் விரைவில் நாகசைதன்யா திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.
நாகசைதன்யா கடைசியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான 'கஸ்டடி' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது