Page Loader
வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியாகும் 'கொன்றால் பாவம்' டீஸர் ரிலீஸ்
'கொன்றால் பாவம்' படத்தின் டீஸர் நேற்று வெளியானது

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியாகும் 'கொன்றால் பாவம்' டீஸர் ரிலீஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2023
10:06 am

செய்தி முன்னோட்டம்

நடிகை வரலக்ஷ்மி, 'சர்பட்டா' புகழ் சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிக்கும், 'கொன்றால் பாவம்' படத்தின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. நடிகை சமந்தா இந்த டீசரை வெளியிட்டார். படத்தின் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தயாள் பத்மநாபன் இயக்கும் 'கண்டால் பாவம்' திரைப்படம், கோடை ரிலீஸுக்கு தயாராகி வருவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படம், ஒரு க்ரைம் த்ரில்லர் genre-இல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய கதை எனக்கூறப்படுகிறது. ஸ்ரீ மோகன் ஹப்பு எழுதிய கன்னட நாடகத்தின் தழுவல் தான் இந்த படம். இந்த படத்தின் அசல் பதிப்பு, கன்னடத்தில் எடுக்கப்பட்டது. பின்னர் தெலுங்கு, தற்போது தமிழில் எடுக்கப்பட்டு வருகிறது. முந்தைய இரு படைப்புகளையும் தயாள் பத்மநாபன் தான் இயக்கியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

'கொன்றால் பாவம்' டீஸர்