Loading...
75 படங்களுக்குப் பிறகு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்! டிசிஎஸ் வேலையை விட்டு சமுத்திரக்கனியால் சினிமாவுக்கு வந்த நமோ நாராயணன்
டிசிஎஸ் வேலையை விட்டு சினிமாவுக்கு வந்த நமோ நாராயணன்

75 படங்களுக்குப் பிறகு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்! டிசிஎஸ் வேலையை விட்டு சமுத்திரக்கனியால் சினிமாவுக்கு வந்த நமோ நாராயணன்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
03:21 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்கத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தில் பழக்கடை மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகர் நமோ நாராயணன். ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் பார்த்து வந்த மென்பொருள் வேலையை உதறிவிட்டு, சினிமா மீதான காதலால் வந்து இன்று 75 படங்களைக் கடந்துள்ள இவரது திரைப்பயணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடோடிகள்

சமுத்திரக்கனியின் அழைப்பும் நாடோடிகள் பயணமும்

நமோ நாராயணன் ஆரம்பத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கொடுத்த அழைப்பின் பேரிலேயே திரைத்துறைக்குள் நுழைந்தார்.

2009 ஆம் ஆண்டு வெளியான நாடோடிகள் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்பத்தை அளித்தது.

அதனைத் தொடர்ந்து ஈசன், போராளி, குட்டிப்புலி, நிமிர்ந்து நில், கொம்பன், அப்பா, அஜித்தின் 'விசுவாசம்' உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட படங்களில் துணை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் தனது அடையாளத்தைப் பதித்தார்.

ஜெயிலர் 2

ஜெயிலர் 2-வில் கிடைத்த மாபெரும் வரவேற்பு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் 2 திரைப்படம் நமோ நாராயணனுக்குப் பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

இப்படத்தில் இவர் நடித்த பழக்கடை மூர்த்தி கதாபாத்திரம் நகைச்சுவையும் திருப்பங்களும் நிறைந்ததாக அமைந்தது.

குறிப்பாக, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவுடன் சேர்ந்து இவர் இடம்பெறும் செஸ் விளையாட்டு காட்சி திரையரங்குகளில் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து, கைதட்டல்களைப் பெற்று வருகிறது.

நெல்சனின் டைமிங் காமிக்ஸ் இவருக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளது.

ADVERTISEMENT

அங்கீகாரம்

75 படங்களுக்குப் பிறகு கிடைத்த உண்மையான அங்கீகாரம்

நாடோடிகள் படத்தில் அறிமுகமாகி பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த போதிலும், தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் இருந்து வந்த நமோ நாராயணனுக்கு, ஜெயிலர் 2 ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

கடின உழைப்பும் முயற்சியும் இருந்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம் என்பதற்குத் தனது ஐடி வேலையைத் துறந்து நடிகராக வெற்றி பெற்றுள்ள நமோ நாராயணனின் இந்த நீண்டகால சினிமாப் பயணம் ஒரு சிறந்த சான்றாகும்.

ADVERTISEMENT