இனி திரையரங்குகளில், ட்ரைலர் வெளியிடப்படமாட்டாது: திரையரங்க உரிமையாளர் சங்கம் முடிவு
செய்தி முன்னோட்டம்
சமீபகாலமாக, பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் நோக்கோடும், வியாபார நோக்கத்தோடும், திரையரங்குகளில், திரைப்படத்தின் ட்ரைலர்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இதற்காக ஒரு குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்க பட்டது இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர், 'லியோ' படத்தின் ட்ரைலர், திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
அந்த நேரத்தில், ரசிகர்கள் ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் செய்து, திரையரங்க வளாகத்தினையும், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர்.
குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகினி தியேட்டரில், சமூக பொறுப்பின்றி ரசிகர்கள் செய்த காரியங்கள், பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட 400 இருக்கைகளை சேதப்படுத்தி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள் ரசிகர்கள்.
இதனை தொடர்ந்து, தற்போது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், இனி எந்த திரைப்படத்தின் ட்ரைலரையும், திரையரங்குகளில் திரையிடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.
embed
இனி திரையரங்குகளில், ட்ரைலர் வெளியிடப்படமாட்டாது
இனி திரையரங்குகளில் ட்ரைலர் வெளியீடு இல்லை!#Trailer #theatres #TNTheatres #TirupurSubramaniam #Leo #KalaignarSeithigal pic.twitter.com/KH4yGw1fOp— Kalaignar Seithigal (@Kalaignarnews) October 17, 2023