'அகநக நட்பது நட்பு': தமிழ் சினிமாவில் வெளியான நட்பு சார்ந்த திரைப்படங்கள்- பகுதி 1
ஒவ்வொரு மனிதனுக்கும், அவனது சுகதுக்கங்களை எந்த ஒரு தடையும் இன்றி பகிர்ந்து கொள்ள ஒரு உறவு கிடைத்து விட்டால், வாழ்க்கையில் எத்துணை துன்பம் நேரிடினும், அவனால் மீண்டு வர முடியும். பெற்றோர்கள், காதலர்கள், கணவன்-மனைவி இவற்றை தாண்டிய ஒரு உறவு நட்பு. நம்பிக்கை என்ற தோணி மீது பயணிக்கும் இந்த உறவை பற்றி, தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியானதுண்டு. அவற்றை பற்றி ஒரு ஒரு தொகுப்பு இதோ: பிரெண்ட்ஸ்: விஜய்-சூர்யா-தேவயானி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், மலையாள திரைப்பட இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவானது. சிறு வயது முதல் இணைபிரியா நண்பர்களாக இருந்த விஜய்-சூர்யா-ரமேஷ் கண்ணா ஆகியோரின் நட்பை குறித்து பேசும் இந்த திரைப்படம் இன்றும் பலராலும் விரும்பப்படுகிறது.
நட்பு சார்ந்த திரைப்படங்கள்
நண்பன்: தளபதி விஜய் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம். கல்லூரியில் படிக்கும் 3 நண்பர்கள், சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து, பின்னர் பல ஆண்டுகள் கழித்து அவர்கள் சந்திக்கும் போது, அவர்கள் வாழ்க்கையில் நடைபெற்ற மாற்றங்கள் குறித்த கதை. இது சேத்தன் பகத் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம். RRR : சமீபத்தில் ஆஸ்கார் விருது வென்ற இந்த திரைப்படம், சுதந்திரத்திற்கு முன்னர் நடக்கும் ஒரு கதையின் களம் என்றாலும், அதில் நடித்திருந்த முன்னணி கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் அழகான நட்பே கதையின் உயிர் நாடி. நண்பனின் கொள்கைக்காக, தனது கனவை தள்ளி வைத்த நண்பனின் கதை.