Page Loader
இந்த வாரம், தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக போகும் தமிழ் படங்களின் பட்டியல் 
சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் படத்தின் போஸ்டர். இந்த படம் நாளை வெளியாகிறது.

இந்த வாரம், தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக போகும் தமிழ் படங்களின் பட்டியல் 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 13, 2023
03:50 pm

செய்தி முன்னோட்டம்

நாளை ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அவற்றின் பட்டியல் இதோ: ருத்ரன்: இத்திரைப்படத்திற்கு, நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் படத்தின் புக்கிங் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், படம் குறிப்பிட்டபடி வெளியாகுமா என ரசிகர்கள் இன்னும் குழம்பியுள்ளனர். இருப்பினும், படத்திற்கான விளம்பரங்களை தயாரிப்பு தரப்பு செய்வதை பார்த்தால், பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சொப்பன சுந்தரி: ஐஸ்வர்யா ராஜேஷ் தான், கதையின் நாயகி. இந்த படத்தை, எஸ்.ஜி.சார்லஸ் என்பவர் இயக்கியுள்ளார். திருவின் குரல்: வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யும் அருள்நிதியின் அடுத்த ரிலீஸ் இது. அருள்நிதியுடன், பாரதிராஜா நடிக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியானது முதல், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை, ஹரிஷ் பிரபு இயக்கியிருக்கிறார்.

card 2

சமந்தா நடிப்பில் 3D -யில் வெளியாகப்போகும் சாகுந்தலம்

சாகுந்தலம்: சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச கதை. படத்தின் கரு அனைவருக்கும் தெரிந்ததாகையால், படத்தின் கிராபிக்ஸ் மற்றும் சமந்தாவிற்காக இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழரசன்: பிச்சைக்காரன் 2 வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த அறிவிப்பான 'தமிழரசன்' முதலில் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தை, பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். ரிப்பப்பரி: 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு, பொறுமையாக கதைகளை தேர்வு செய்து, மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ரிப்பப்பரி'. இந்த படத்தை, அருண் கார்த்திக் இயக்கியுள்ளார்.