ருத்ரன் படத்தின் வெளியீட்டிற்கு தடை விதித்த நீதிமன்றம்!
கோலிவுட் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பைவ்ஸ்டார் கதிரேசன் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் தான் 'ருத்ரன்'. தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் இந்த திரைப்படம், வரும் ஏப்ரல் 14 அன்று வெளிவரப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படத்திற்கு தடை என ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. ஆம், படத்தின் டப்பிங் உரிமைகளுக்காக தனியார் நிறுவனத்துடன், தயாரிப்பு தரப்பு போட்டிருந்த ஒப்பந்தத்தை, சரியான காரணம் இன்றி ரத்து செய்ததாக கூறி, டப்பிங் நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ருத்ரன்' படத்தை, வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி வரை வெளியிட தடை என உத்தரவிட்டுள்ளனர்.