Page Loader
ருத்ரன் படத்தின் ஆடியோ லான்ச் மேடையில், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
நலிவடைந்த 150 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

ருத்ரன் படத்தின் ஆடியோ லான்ச் மேடையில், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 11, 2023
06:50 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், பைவ்ஸ்டார் கதிரேசன் முதல்முறையாக இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் தான் 'ருத்ரன்'. இந்த திரைப்படத்தில், பிரியா பவானிஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் இந்த திரைப்படம், வரும் ஏப்ரல் 14 அன்று வெளிவரப்போகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ராகவா லாரன்சும் கலந்து கொண்டார். ஆடல், பாடல் என கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் இறுதியில், ராகவா லாரன்ஸ் 150 குழந்தைகளை, தன்னுடைய அறக்கட்டளையின் கீழ் தத்தெடுத்துக்கொள்வதாகவும், அவர்களின் படிப்பு செலவுகளை, தான் கவனித்து கொள்வதாகவும் அறிவித்தார். இது குறித்த ட்வீட் ஒன்றையும் அவர் இன்று வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

குழந்தைகளை தத்தெடுத்த ராகவா லாரன்ஸ்