'ஊம் சொல்றியா மாமா' முதல் 'ராவடி' வரை, ஐட்டம் டான்சரான முன்னணி நடிகைகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் கோலோச்சும் நேரத்திலேயே, மற்ற நடிகர்கள் படங்களில், முன்னணி நடிகைகளாக அல்லாமல், ஐட்டம் டான்சராக சில ஹீரோயின்கள் களமிறங்குகின்றனர்.
சமந்தா முதல், தற்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கும் ஸாயீஷா வரை பலர் இது போன்ற பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளனர். அந்த ஒரு பாட்டு மூலம், படத்தின் ஹீரோயினை விட புகழ் பெறுகின்றனர்.
அப்படி, ஐட்டம் டான்சர்களாக களமிறங்கிய சில ஹீரோயின்களின் பட்டியல் இதோ:
நயன்தாரா: நயன்தாரா, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்கள் காரணமாக ஒதுங்கி இருந்த காலத்தில், கம்பேக் தந்த படம் தான், 'எதிர்நீச்சல்'. அதில் வரும் 'சத்தியமா நீ எனக்கு' பாடலில், தனுஷுடன் நடனமாடி இருந்தார்.
தமிழ் சினிமா
நடிப்பு மட்டுமின்றி, நடனத்திலும் கலக்கும் நடிகைகள்
ஸ்ரேயா: நடிகை ஸ்ரேயா, சிவாஜி படத்தின் மூலம், புகழின் உச்சிக்கு சென்றார் எனலாம். அதன் பிறகு, தெலுங்கு படவுலகில் கவனம் செலுத்தி வந்தவர், 'இந்திரலோகத்தில் ந. அழகப்பன்' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இதற்காக அவர் பல லட்சங்களில் சம்பளம் வாங்கியதாகவும் அப்போது பேச்சு.
மாளவிகா: 'மிஷிக்கின் படமும், மஞ்சள் நிற புடவையையும்'- ஒரு அடையாளமாக மாற்றியது இந்த பாடல் என கூறலாம். சித்திரம் பேசுதடி என்ற படத்தில், இவர் ஆடிய 'வாழ மீனுக்கும்' என்ற பாடல், இன்றும் பலரால் விரும்பக்கூடிய பாடல்.
ப்ரியாமணி: ஹிந்தி படமான 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில், ஷாருக்கான்-உடன் பயங்கரமான குத்தாட்டம் போட்டிருந்தார்.