பேட்டிகளை தவிர்க்கும் முன்னணி கதாநாயகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை
அஜித், விஜய் மற்றும் தனுஷ் இவர்கள் மூவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா? மூவருமே, நேர்காணல்களை விரும்புவதில்லை, அல்லது தவிர்க்கிறார்கள். எந்த ஒரு படத்திற்காகவும் தனியாக பேட்டியளிப்பதில்லை என்ற கொள்கை கடைபிடித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நடிகர்களின் பேட்டி கொள்கை பற்றி சிறிய அலசல்: தனுஷ் Netflix-ன் 'தி கிரே மேன்' என்ற படத்துக்காக மட்டும், தனுஷ் இந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்து, பேட்டிகளை அளித்தார். ஆனால் அதற்கு பிறகு வெளியான, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களுக்காக தமிழ்நாடு அளவில் கூட எந்த பேட்டியும் அவர் தரவில்லை. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை. இருப்பினும், தன்னுடைய படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு மட்டும் தவறாமல் கலந்து கொள்கிறார்.
கருத்துகள் திரிக்கப்படுவதால், பேட்டிகளை தவிர்க்கும் அஜித் & விஜய்
விஜய்: ஆரம்ப காலத்தில், தன்னுடைய படங்களுக்காக மட்டுமின்றி, சிறப்பு நேர்காணல்களுக்கும் ஒத்துழைத்த நடிகர் விஜய், அதன் பின்னர் நேர்காணல்களுக்கு தடை சொல்லி விட்டார். இதற்கான காரணத்தை, சமீபத்தில், அவர் தெரிவித்திருந்தார். 'பீஸ்ட்' படத்துக்காக தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்தி, நெல்சன் திலீப்குமாரின் பேட்டிக்கு சம்மதித்தார். அந்த நேர்காணலில் தான், முன்னர் பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடைய கருத்தை மாற்றி தெரிவித்த காரணத்தால் தான், நேர்காணலை தவிர்ப்பதாக தெரிவித்தார். அஜித்: இவர் முற்றிலுமாக போது நிகழ்ச்சிகளை தவிர்க்கிறார். தன்னுடைய கருத்துகளை திரித்து வெளியிடுவதால் இந்த முடிவு என கூறியுள்ளார். மேலும் நல்ல படங்கள், தானே விற்று கொள்ளும் என படத்தின் ப்ரோமோஷன்களுக்கும் கலந்து கொள்வதில்லை நடிகர் அஜித்.