தமிழ் திரை வரலாற்றில், நம் நினைவில் நீங்கா 'வாத்தி' கதாபாத்திரங்கள்
தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் நாளை வெளியாகவிருக்கும் இவ்வேளையில், தமிழ் சினிமா வரலாற்றில், இது வரை வெளியாகி, நம் மனதில் பதிந்துபோன, சில வாத்தியார் கதாபாத்திரங்களை பற்றி ஒரு சிறிய பிளாஷ்பேக்: தர்மத்தின் தலைவன்: மறதி வாத்தியாராகவும், தம்பி மேல் அளவுகடந்த பாசம் கொண்ட அண்ணனாகவும், பல்வேறு பரிமாணங்கள் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். நம்மவர்: இன்றும் பலரால், 'நம்மவர்' கமல் என்று அடைமொழியுடன் குறிப்பிடும் அளவிற்கு இந்த கதாபாத்திரம், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது. இந்த படத்தை பார்த்து தான் லோகேஷ் கனகராஜ், 'மாஸ்டர்' படத்தை எடுத்தார் எனவும் கூறப்படுகிறது. ரமணா: புள்ளி விவரங்களை பட்டியலிடும், அமைதியான கல்லூரி வாத்தியாராக நடித்த விஜயகாந்தை யாரும் மறக்க முடியாது.
தமிழ் சினிமாவின் வாத்தியார் சமுத்திரக்கனி
முந்தானை முடிச்சு: பள்ளி ஆசிரியராகவும், சிங்கிள் பேரண்ட்டாகவும், இந்த கதாபாத்திரத்தில் பொருந்தி போயிருப்பார் பாக்யராஜ். மாஸ்டர்: இந்த படத்தை பற்றி கூற தேவையில்லை. சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வரும் வாத்தியாராக விஜய் நடித்திருப்பார். ஏற்கனவே கூறியதை போல, 'நம்மவர்' படத்திலிருந்து ஈர்க்கப்பட்டு இந்த படத்தை எடுத்ததாக கூறப்படுகிறது. சட்டை/அடுத்த சட்டை/அம்மா கணக்கு: தமிழ் சினிமாவின் வாத்தியார் என்று சொல்லும் அளவுக்கு, இந்த மூன்று படங்களிலும் சமுத்திரக்கனி வாத்தியார் வேடத்தில் நடித்திருந்தார். குழந்தைகளுடன் அன்பாக பழகி, ஒரு நண்பன் போல நடத்தும், வாத்தியார் இவர். வாகை சூட வா: தேசிய விருது பெற்ற இந்த படம், 60-70 களில் நடப்பது போன்ற கதைக்களத்தை உடையது. இந்த படத்தில், விமல் பள்ளி வாத்தியார் வேடத்தில் நடித்திருந்தார்.