Page Loader
இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படங்களின் பட்டியல் இதோ
வாத்தி, பகாசுரன் என்ற இரு படங்களும் நாளை வெளியாகிறது

இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படங்களின் பட்டியல் இதோ

எழுதியவர் Venkatalakshmi V
Feb 16, 2023
10:49 am

செய்தி முன்னோட்டம்

இந்த வாரம் இரு பெரும் படங்கள் திரைக்கு வரவிருக்கிறது. அண்ணனும், தம்பியும் இந்த வாரம் மோதவிருக்கிறார்கள். ஆம், இந்த வாரம், செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள பகாசுரனும், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படமும் நாளை, பிப்ரவரி 17, வெளிவரவுள்ளது. தனுஷ் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாத்தி'. இந்த படத்தின் ட்ரைலர் சென்ற வாரம் வெளியானது. தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகிறது. தெலுங்கில் இந்த படம், 'சார்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்திய கல்வி அமைப்பில் நடக்கும் அவலங்களை எதிர்க்கொள்ளும் வாத்தியாரை பற்றிய கதை என கூறப்பட்டுள்ளது.இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

திரைப்பட ரிலீஸ்

தனுஷுடன் மோத போகும் செல்வராகவன்

மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் பெயர், 'பகாசுரன்'. ஏற்கனவே, 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி' மற்றும் 'ருத்ர தாண்டவம்' போன்ற சர்ச்சையான படங்கள் மூலம் மக்களால் அறியப்பட்டவர் மோகன்.ஜி. தொடர்ந்து அதே பணியில் வெளியாக போகும் இந்த படத்திலும், பெண்களை மையப்படுத்தி ஏற்படும் சமூக அவலங்களை வெளிக்காட்டும் பேட்மேன் கூறப்படுகிறது. இந்த படத்தில், செல்வராகவனுடன் இணைந்து, ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன். கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவற்றோடு, தெலுங்கில் சூப்பர்ஹிட்டான, அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுந்தபுரமுலோ என்ற திரைப்படத்தின் ரீமேக்காக கருதப்படும், 'ஷேஜாதா' என்ற ஹிந்தி படமும் வெளியாகவுள்ளது. இதில் கார்த்திக் ஆர்யன் மற்றும் க்ரிதி சனோன் நடித்துள்ளனர்.