Page Loader
2022-ல் அதிக படங்களில் நடித்த தமிழ் திரைப் பிரபலங்களின் லிஸ்ட் இதோ!
2022-ல் அதிக படங்களில் நடித்த கோலிவுட் நடிகர்கள்

2022-ல் அதிக படங்களில் நடித்த தமிழ் திரைப் பிரபலங்களின் லிஸ்ட் இதோ!

எழுதியவர் Saranya Shankar
Dec 30, 2022
01:57 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வருடம் மட்டும் திரையரங்கில் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்ட தமிழ் படங்களின் எண்ணிக்கை 220 ஆகும். இதில் எதிர்பார்த்து வெளிவந்த சில படங்கள் தோல்வியையும் சந்தித்தன. எதிர்பார்க்காத சில திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியையும் தந்தன. அவ்வாறு 2022-ல் வெளிவந்த படங்களில் அதிக எண்ணிக்கையில் நடித்த நடிகர்களை பற்றி பார்ப்போம். இந்த வருடம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் மட்டும் 5 படங்கள் நடித்துள்ளார். இவர் நடித்து வெளிவந்த தமிழ் படங்கள் புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகும். தமிழ் மட்டுமில்லாமல், மலையாளம் மற்றும் தெலுங்கிலும் இவர் நடித்த படங்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள் யார்

அதிக படங்களில் நடித்த கோலிவுட் நடிகர்கள் யார்?

நடிகர் அசோக் செல்வன் நடித்து, மன்மத லீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல், வேழம், மாற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய 5 படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஜெய் நடித்து, இந்த ஆண்டு, வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே, பட்டாம் பூச்சி, எண்ணித் துணிக, மற்றும் காஃபி வித் காதல் ஆகிய 5 படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக நடிகர் அசோக் குமாரும் 5 படங்கள் நடித்துள்ளார். அவை விடியாத இரவொன்று வேண்டும், பெஸ்டி, மாயத்திரை, 4554 மற்றும் தெற்கத்தி வீரன் ஆகும். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு இந்த வருடம் மட்டும் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.