தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 1958 மே 30ம் தேதி பிறந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.
முதலில் பிரபல இயக்குனர் விக்கரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
பின் 1990ல் ரகுமான் நடிப்பில் புரியாத புதிர் திரைப்படத்தை இயக்கி இயக்குனரானார்.
தமிழ் முதல் ஹிந்தி வரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, புருஷ லட்சணம், அவ்வை ஷண்முகி, நட்புக்காக என பல குடும்பங்கள் ரசிக்கும் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத இயக்குனரானர்.
இவர் இயக்கிய திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடிப்பது இவரது வழக்கம்.
K.S.Ravikumar
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்
ஒரு சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் வில்லன், காமெடியன் என அனைத்து ஏரியாக்களிலும் இடம்பெற்று கலக்குவார்.
ரஜினிகாந்த் முதல் சூர்யா வரை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
ரஜினியின் முத்து படம் தமிழர்களிடையே மட்டுமால்லாமல் ஜப்பானியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.
முக்கியமாக கமலஹாசன் மற்றும் கே.எஸ் ரவிகுமாரின் கூட்டணி அபார வெற்றியை கண்டது.
தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவோ, நஷ்டமோ ஏற்படுத்தாத பட்ஜெட் ஃபிரென்ட்லி இயக்குனர் என்ற பெயர் இவருக்கு மட்டுமே சொந்தம்.
பல திரைப்படங்கள் இவருக்கு விருதுகளை அள்ளித் தந்துள்ளது.
அவரின் பிறந்தநாளான இன்று அவரை வாழ்த்துவோம்!