கடவுள் அவதாரத்தில் தெலுங்கில் அறிமுகமாகும் ஜெயம் ரவி; வெளியான பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், 'வட்டி காசுலவாடா' என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் களமிறங்குகிறார். நடிகர் மஞ்சு மனோஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படம், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான குடும்ப பின்னணியை கொண்ட நடுத்தர வர்க்கக் கதையாக உருவாகி வருகிறது. ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு (செப்டம்பர் 10), படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விவரங்கள்
பெருமாளாக நடிக்கும் ஜெயம் ரவி
இத்திரைப்படத்தில் திருப்பதி ஏழுமலையனாக (பெருமாள்) சிறப்பு பாத்திரத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார்.
'ஓம் நமோ வேங்கடேசாய' என்ற ஆன்மீக வாசகத்துடன், மனிதக் கரத்தைப் பிடித்துள்ள பெருமாளின் கரங்கள் அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடுத்தர குடும்பக் கதையில் இந்த ஆன்மீகக் கதாபாத்திரம் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பது படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.
தேஜ் உப்பலபாடி இயக்கத்தில், ஏ.கே.என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஏடிவி ஓரிஜினல்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இத்திரைப்படம் பான்-இந்திய அளவில் வெளியாக உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Happiest Birthday to our beloved @iam_RaviMohan ✨
— AK Entertainments (@AKentsOfficial) September 10, 2026
Blessed to welcome you on board #VaddiKaasulaVaada in the divine role of Lord Govinda who resides in every heart ❤️
Excited for this special journey ahead. Om Namo Venkatesaya 🙏@HeroManoj1 @tej_uppalapati @AnilSunkara1… pic.twitter.com/ch5cQruA2a