வைரலாகும் நடிகை தமன்னாவின் பள்ளிப் பருவ வீடியோ- வித்தியாசமே இல்லை என ரசிகர்கள் கருத்து
எழுதியவர்
Srinath r
Oct 12, 2023
12:12 pm
செய்தி முன்னோட்டம்
நடிகை தமன்னா 18 வருடங்களுக்கு முன் அளித்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் இருக்கும் தமன்னாவிற்கும், தற்போதுள்ள தமன்னாவிற்கும் வித்தியாசமே இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த நேர்காணலில், 13 வயதே ஆன தமன்னாவின் முதல் திரைப்படமான 'சந்த் சா ரோஷன் செஹ்ரா' குறித்து அவர் பேசியுள்ளார். "நான் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். நான் அடுத்த ஆண்டு(2005) பொதுத்தேர்வுகளை எழுதுவேன். நான் அதற்காக தயாராகி வருகிறேன்". "இருப்பினும் நான் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு பதிமூணரை வயது தான். நான் பத்தாம் வகுப்பு இப்போதுதான் முடிக்கப் போகிறேன்" என பேசி இருந்த காணொளியை தற்போது வைரலாகி வருகிறது.