Page Loader
சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட்
விரைவில் சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்

சூர்யவம்சம் 2 விரைவில்! சரத்குமார் ட்வீட்டால் வெளியான சூப்பர் அப்டேட்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 28, 2023
02:09 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி மற்றும் பலர் நடிக்க, விக்ரமன் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்த படம் வெளியாகி நேற்றுடன் 26 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இந்த படத்தை குறித்து, நடிகர் சரத்குமார் ஒரு ட்வீட் பதிவிட்டார். அதில், "கலைத்துறை பயணத்தில், காலங்கள் கடந்தும், தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும், இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களின் சிந்தையிலும் நீங்காமல் நிறைந்திருந்து கொண்டாடக்கூடிய சிறப்புவாய்ந்த குடும்பத் திரைப்படம் சூர்யவம்சம் வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள். கதாபாத்திரங்கள், வசனங்கள், பாடல்கள் என ஒட்டுமொத்த திரைப்படத்தையும் ரசித்து, மாபெரும் வெற்றியளித்து, ஆதரவளித்த அன்பர்களுக்கு நன்றி விரைவில் சூர்யவம்சம் - 2!" என கூறியுள்ளார். இதனையடுத்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

விரைவில் சூர்யவம்சம் - 2!