நடிகராக அறிமுகமாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயணா ராவ்!
தென் இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்திய நாராயணா ராவ் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையை தலைமை இடமாக கொண்ட பிரில்லியண்ட் கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் தமிழ் படத்தில் அறிமுகமாகவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதில் சத்திய நாராயண ராவ் நடிகராக அறிமுகமாகிறார் எனவும் கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் ரஜினியின் பெற்றோர் நினைவிடம் அமைந்துள்ளது. அங்கு ரஜினிகாந்த்தின் சகோதரர் சத்திய நாராயணா தற்போது நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை நடக்கவிருக்கிறது. பூஜைக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் குறித்த அப்டேட்டுகளுக்கு நியூஸ் பைட்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.