Page Loader
பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம்
லால் சலாம் திரைப்பட படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் உடன் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்

பொங்கலுக்கு வெளியாகிறது ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம்

எழுதியவர் Srinath r
Oct 01, 2023
03:04 pm

செய்தி முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் வெளியிட்டு தேதியை லைகா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

படத்தின் வெளியிட்டு தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு