
'சூப்பர்ஸ்டார்' பட்டத்தை யாருக்கு வேண்டுமானாலும் தருவார்கள்: ரஜினியின் அண்ணன் பேட்டி
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்தியா சினிமாவிலும், 'சூப்பர்ஸ்டார்' என்ற குறிப்பிட்டால் அது ரஜினிகாந்தை மட்டும் தான்.
எனினும் அவ்வப்போது, அவரின் இடத்தை பிடிக்க, பலரும் அது சார்ந்த அடைமொழிகளை வைத்து கொண்டனர்.
'லிட்டில் ஸ்டார்', 'மெகா ஸ்டார்' தொடங்கி, 'பவர்ஸ்டார்' வரை பலரும் தங்கள் பெயரோடு இணைத்து கொண்டனர்.
இதனிடையே, சமீபத்தில் நடைபெற்ற 'ஜெயிலர்' ஆடியோ லாஞ்சில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய உரை சர்ச்சையை கிளப்பியது.
உடனே, ரஜினி, நடிகர் விஜயை தான் சாடுகிறார் என்ற பேச்சும் எழுந்தது.
காரணம், விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற பேச்சு பரவலாக எழுந்துள்ளது.
அதோடு, அவரும் அரசியல் பாதையை தேர்வு செய்யவுள்ளார் என்றதும், அவர் ரஜினியின் இடத்திற்கு தான் போட்டி போடுகிறார் என கூறப்பட்டது.
card 2
'ஜெயிலர்' படம் வெற்றி பெற வேண்டிய சத்யநாராயணா ராவ்
இதனிடையே, ரஜினிகாந்தின் அண்ணன், சத்யநாராயணா ராவ், திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் கோயிலில், சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார்.
அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, "பொதுமக்களின் ஆசிர்வாதத்தினால், என் தம்பி நடிகர் ரஜினிகாந்த், மக்களுக்கு பலவகையில் சேவை செய்து வருகிறார். வரும் 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. பாப்பாத்தி அம்மன் அருளால் இத்திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும்".
"நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிக்க உள்ளார். அதில் தற்போது 5 படங்கள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிகாந்த்துக்கு மக்கள் வழங்கியது. மக்கள் விரும்பினால் அந்தப் பட்டத்தை யார் வேண்டுமானாலும் வாங்கட்டும்" என்றும் அவர் கூறினார்.