அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரைப்படங்களான 'மூனு', 'வை ராஜா வை' உள்ளிட்டவைகளை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பிறகு தற்போது லைக்கா தயாரிப்பில் 'லால் சலாம்' என்னும் படத்தினை இயக்கி வருகிறார்.
இதில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடத்தப்பட்டது.
இதனிடையே, சற்றும் எதிர்பாராவிதமாக இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்னும் அறிவிப்பு வெளியானது.
இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், மும்பையில் ரஜினியின் காட்சிகள் படமாக்கப்பட்டது.
தற்போது இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் திருவண்ணாமலையில் நடைபெற்று வருவதால், அங்குச்சென்றுள்ள ரஜினி இன்று(ஜூலை.,1)அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
இச்செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
திருவண்ணாமலை கோயிலில் ரஜினிகாந்த்
திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார்#Rajini #Tiruvannamalai #LalSalaam pic.twitter.com/oV0GJIWobz
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 1, 2023