Page Loader
ஃபூட் டெலிவரி ஆப்-ஐ துவக்கிய ரஜினிகாந்த் பட வில்லன் நடிகர்
'தர்பார்' பட விழாவின் போது, ரஜினிகாந்துடன் சுனில் ஷெட்டி

ஃபூட் டெலிவரி ஆப்-ஐ துவக்கிய ரஜினிகாந்த் பட வில்லன் நடிகர்

எழுதியவர் Venkatalakshmi V
May 12, 2023
12:05 pm

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்த்தின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'தர்பார்' படத்தின் வில்லன் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் பிரபலமான பாலிவுட் நடிகர் ஆவர். கர்நாடகாவின் மங்களூரை பூர்விமாக கொண்ட சுனில் ஷெட்டி, நடிப்பு ஆசையில், மும்பைக்கு சென்று திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். பல வெற்றி படங்கள் தந்த பின்னர், தற்போது திரையுலகை விட்டு சற்று ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், ஸ்விக்கி, சோமேடோ போன்ற உணவு டெலிவரி செயலிகளை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட 'வாயு' என்ற செயலியின் பங்குதாரராக, சுனில் சேர்ந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு அந்த செயலியின் விளம்பர தூதராகவும் செயல்பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலில், வாடிக்கையாளர் லாபத்திற்காக, 'zero commission' முறையில் உணவிற்கு விலைகள் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

உணவு டெலிவரி ஆப்பில் களமிறங்கும் சுனில் ஷெட்டி