
விஜய் டிவிக்கு போட்டியாக வெங்கடேஷ் பட் தலைமையில் வருகிறது புது குக்கிங் ஷோ
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் உள்ள பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல சீசன்கள் தாண்டி ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போது மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் பிரபலமான 3 நடுவர்களின் ஒருவரான வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.
விரைவில் புதிய தளத்தில் சந்திப்பதாக அப்போது தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ஒரு சமையல் நிகழ்ச்சியில் அவர் நடுவராக கலந்து கொள்கிறார்.
இது பற்றிய ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகியது.
அதில் குக்கு வித் கோமாளிக்கு போட்டியாக இந்நிகழ்ச்சிக்கு டாப் குக்கு டூப் குக்கு என பெயரிட்டு உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
புது குக்கிங் ஷோ
Yow Militri #VenkateshBhatt'uh.. Nee ennayya panra inga!
— Kalaiarasan K. Mohanraj (@BalajKarun) April 28, 2024
Adei.. #SunTV nee epodhu dhaan thirundhuvaai?? pic.twitter.com/KkhJsAqu4O