Page Loader
தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்
D 50 படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ்

தனுஷின் 50 -வது படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 19, 2023
12:33 pm

செய்தி முன்னோட்டம்

தனுஷின் ஐம்பதாவது படத்தை தயாராகவிருப்பதாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம், நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனுஷின் சமீபத்திய வெளியீடான 'திருச்சிற்றம்பலம்' படத்தையும், அந்நிறுவனம் தான் தயாரித்திருந்தது. D-50 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற விபரங்களை, விரைவில் வெளியிட போவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சமீபத்தில் 'துணிவு' பட இயக்குனர் H .வினோத், தான் தனுஷிடம் ஒரு கதை கூறியுள்ளதாக தெரிவித்து இருந்தார். அதனால் இந்த படத்தை அவர் இயக்குவார், என ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள 'வாத்தி' திரைப்படம், அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து 'கேப்டன் மில்லர்' என்ற பீரியட் படத்தில் நடித்து வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

D-50