
சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு
செய்தி முன்னோட்டம்
தன் வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் தன்னைக் காப்பாற்ற கோரி ட்விட்டரில் பதிவிட்டு இருந்த நடிகர் விஷ்ணு விஷால், பத்திரமாக படகு மூலம் மீட்கப்பட்டார். மேலும் தான் மீட்கப்பட்டதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில், சென்னையின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
மழை நின்றாலும் இன்னும் வெள்ளநீர் வடியாததால் பொதுமக்கள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், காரப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் வீட்டின் உள்ளே வெள்ள நீர் புகுந்தது.
2nd card
தன்னை மீட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவித்த விஷ்ணு விஷால்
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தவர், தன் வீட்டினுள் நீர் புகுந்து வருவதாகவும், காரப்பாக்கம் பகுதி கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகும் தெரிவித்திருந்தார்.
மேலும், தான் உதவிக்கு அழைத்திருப்பதாகவும், மின்சாரம் மற்றும் வைஃபை இல்லை எனவும், வீட்டின் மொட்டை மாடியில் ஒரே இடத்தில் மட்டும் செல்போன் சிக்னல் கிடைப்பதாகவும் பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
தான் மீட்கப்பட்ட புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ள அவர், மீட்பு குழு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
காரப்பாக்கம் பகுதியிலும் மீட்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும், மூன்று படகுகள் அங்கு மக்களை மீட்டு வருவதாகவும், அவர் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
படகு மூலம் விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு
Thanks to the fire and rescue department in helping people like us who are stranded
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) December 5, 2023
Rescue operations have started in karapakkam..
Saw 3 boats functionng already
Great work by TN govt in such testing times
Thanks to all the administrative people who are working relentlessly https://t.co/QdoW7zaBuI pic.twitter.com/YkX9vcEGAc