Loading...
சிம்புவின் 'STR 51' படம் தாமதமாக என்ன காரணம்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்
STR 51 படத்தின் தற்போதைய நிலை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளார்

சிம்புவின் 'STR 51' படம் தாமதமாக என்ன காரணம்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 07, 2026
02:24 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் (சிம்பு) நடித்து வரும் 'அரசன்' பட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், 'டிராகன்' பட இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் சிம்பு இணையவுள்ள 'STR 51' படத்தின் தற்போதைய நிலை குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரு கற்பனை ரொமாண்டிக் காமடி (Fantasy Romantic Comedy) திரைப்படமாக உருவாகவுள்ளது. இதில் சிம்பு காதல் கடவுளாக தோன்றவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் சந்தானம் இணைந்திருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் மற்றும் சிம்புவின் நடனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் உருவாகவுள்ளதும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாமதம்

படம் தாமதமாவதற்கான காரணம்

தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, 'STR 51' திரைப்படம் தாமதமாவதற்கு சிம்புவின் 'அரசன்' படப்பிடிப்பு காரணம் அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'தர்மன்' திரைப்படத்தை இயக்கவுள்ளதே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து தனது கதைகளை எழுதி முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வார் என்றும், திரைக்கதையில் எந்த மாற்றமும் செய்யாத வகையில் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றக்கூடியவர் என்றும் அர்ச்சனா குறிப்பிட்டார்.

'டிராகன்' படத்தின் போது எடிட்டிங்கில் எந்தக் காட்சியையும் நீக்காத அளவிற்கு அவர் காகிதத்திலேயே அனைத்தையும் தயார் செய்துவிடுவார் என்றும் அவர் பாராட்டினார்.

தர்மன்

ரஜினி படத்தின் முடிவுக்கு பின் படப்பிடிப்பு

அஷ்வத் கதையை எழுதி முடிக்கும் வரை சிம்பு 'அரசன்' படத்தில் கவனம் செலுத்தினார்.

அதே வேளையில், அஷ்வத்திற்கு ரஜினிகாந்தின் 'தர்மன்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அத்திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னரே, அடுத்த ஆண்டு சிம்புவின் 'STR 51' படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT