
கோலிவுடில் பெற்றோர்கள் வழியில், சினிமா துறைக்குள் நுழைந்த ஸ்டார் கிட்ஸ்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் திரைவுலகில் சமீப காலங்களில், நெபொடிசம் என்ற வார்த்தை அடிக்கடி உபயோகிக்கப்படுகிறது.
அதாவது, பெற்றோர் எந்த தொழிலில் பிரபலமாக உள்ளாரோ, அதே தொழில், அவர்களது பிள்ளைகளை புகுத்திவிடுவது.
அது குறிப்பாக சினிமாத்துறையில், பெற்றோர் வழியிலேயே பிள்ளைகளும் சினிமா துறையை தேர்ந்தெடுப்பது சாதாரணமாக பார்க்கப்பட்டாலும், தற்போது அது சர்ச்சையை ஈர்த்துள்ளது.
ஆனால், என்னதான் 'ஸ்டார் கிட்ஸ்' என்று அழைக்கப்பட்டாலும், தமிழ் சினிமாவை பொறுத்தவரை, திறமையும், ரசிகர்களின் பேராதரவும் இல்லையென்றால், எத்தனை பெரிய ஸ்டார் கிட்-ஆக இருந்தாலும் கோலோச்ச முடியாது.
அப்படி, திரைபிரபலத்தின் வாரிசாக உள்ளே நுழைந்து, 'ஸ்டார்' அந்தஸ்தை பெற போராடியவர்கள் பட்டியல் இதோ:
card 2
கோலிவுட்டின் 'ஸ்டார் கிட்ஸ்' பட்டியல்
துளசி, கார்த்திகா- ராதா: 80'களின் ஹீரோயின் ராதா. அம்பிகா-ராதா என தமிழ் திரையுலகை ஆட்டி படைத்த சகோதரிகள். ராதாவின் பிள்ளைகள் இருவருக்கும் பெரிய திரைப்படத்தின் அறிமுகம் கிடைத்தது. இருப்பினும், ஏனோ இவர்களால் அம்மாவை போல திரைத்துறையில் ஜொலிக்க முடியவில்லை.
சுசீந்திரா பாலி- வைஜயந்திமாலா: பழம்பெரும் நடிகையும், அரசியல்வாதியுமான வைஜயந்திமாலாவின் மகன், சுசீந்திரா பாலி. 'நினைத்தாலே' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இருப்பினும் தொடர்ந்து அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை.
பின்ட்டு பாண்டு-பாண்டு: பிரபல காமெடி நடிகர் பாண்டு. இவரும் தனது மகனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசைப்பட்டார். வெள்ளச்சி என்ற படத்தில், அப்பாவுடன் இணைந்து நடித்தார் பின்ட்டு.
துஷ்யந்த் -ராம்குமார் கணேசன்: சிவாஜி கணேசன் வீட்டின் வாரிசு இவர். ஆனால் பெரிதாக ஜொலிக்கவில்லை