'லவ் டுடே' ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன தமிழ் திரைப்படம் 'லவ் டுடே'.
அந்த படத்தின் வெற்றி தந்த ஊக்கத்தினால், மற்ற மொழிகளில் அதை டப்பிங் செய்து வெளியிட்டனர் பட தயாரிப்பாளர்கள். அங்கும் பலத்த வெற்றி அடைந்தது அந்த திரைப்படம்.
இதனை அடுத்து, அந்த படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஃபாண்டம் ஸ்டுடியோஸ் நிறுவனம், அந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அமீர் கானின் மகனான ஜுனைத்தை நடிக்க வைக்க ஒப்பந்தமிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், கதாநாயகியாக, இவானா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
லவ் டுடே இந்தி ரீமேக்
— MiniByteCinema (@MiniByteCinema) March 26, 2023
ஸ்ரீ தேவி 2-வது மகள் நடிகையாகிறார் #KushiKapoor #LoveToday Hindi Remake #LoveTodayHindi pic.twitter.com/w9xCRFa96t