
தளபதி 67ல் விஜய்க்கு வில்லனாகும் சிம்பு: லோகேஷின் பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்
செய்தி முன்னோட்டம்
தளபதி 67 படத்தை குறித்த அப்டேட்களை பிப்ரவரி மாதம் வெளியிடுவோமென, அதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தெரிவித்தார்.
பிப்ரவரி 1 ,2 மற்றும் 3ஆம் தேதிகளில் படத்தை பற்றிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என அவர் குறிப்பிட்டு கூறினார்.
தற்போது, தளபதி 67ல், நடிகர் சிலம்பரசன் நடிக்க வாய்ப்பு உள்ளதாக, இணையத்தில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது.
அதற்கு காரணம், நடிகர் சிம்புவின் பிறந்த நாள், வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி. அன்றுதான், படத்தின் முக்கிய அறிவிப்பும் வரவிருக்கிறது என லோகேஷ் கூறியிருப்பதால், இந்த வதந்தி பரவி வருகிறது.
அதோடு, சிம்பு, தற்போது வெளியான விஜய்யின் 'வாரிசு' படத்தில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.
LCU
லோகேஷ் கனகராஜின் LCU
விஜயுடன் அடுத்த படத்தில் இணைவதற்கு, இந்த பாடல் ஒரு தொடக்கம் எனவும் கூறி வருகின்றனர் நெட்டிஸன்கள்.
தற்போது, சிம்பு, தனது 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தாய்லாந்தில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். அவர் பிறந்த நாள் அன்று அறிவிப்பு வெளியானதும், நேரடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
LCU வகையில் உருவாகி வரும் இந்த படத்தில், ஏற்கனவே பஹத் பாசில் நடிக்கவுள்ளதாகவும் ஒரு பேச்சு கிளம்பி உள்ளது. அதை கிட்டத்தட்ட உறுதிபடுத்தி இருக்கிறார் பஹத்.
'மாஸ்டர்' படத்திற்கு பிறகு, நடிகர் விஜய்யும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ள 'தளபதி 67 ' படத்தில், விஜய்க்கு, கேங்ஸ்டர் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது.