நெட்ஃபிலிக்ஸின் காக்கி 2 வெப் சீரிஸில் போலீஸ் வேடத்தில் சவுரவ் கங்குலி நடிக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, நெட்ஃபிலிக்ஸின் வரவிருக்கும் காக்கி 2 வெப் சீரிஸ் புரோமோவில் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்த புரோமோவில் சவுரவ் கங்குலி போலீஸ் சீருடையில் இடம்பெற்றுள்ளார். இது தொடரில் அவரது கதாப்பாத்திரம் குறித்த ஊகங்களைத் தூண்டியுள்ளது.
வெப் சீரிஸில் கங்குலி இடம் பெற்றிருப்பது கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
ஜீத் மற்றும் ப்ரோசென்ஜித் சட்டர்ஜி நடித்த இந்தத் தொடர் ஏற்கனவே குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது.
மேலும், கங்குலியின் பங்கேற்பு உற்சாகத்தை மேலும் கூட்டியுள்ளது. தகவலறிந்த வட்டாரங்களின்படி, அவர் பாருய்பூரில் உள்ள பினோதினி ஸ்டுடியோவில் புரோமோ ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.
அப்போது போலீஸ் உடையில் அவர் இருந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.
வெப் சீரீஸ்
வெப் சீரீஸில் கங்குலி நடித்துள்ளாரா?
புரோமோ ஷூட்டிங்கில் சவுரவ் கங்குலி பங்கேற்றிருந்தாலும், இந்த வெப் சீரிஸில் கங்குலி ஏதேனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், இது அவரது கிரிக்கெட்டுக்குப் பிந்தைய வாழ்க்கையில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. நிர்வாகம் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக ஏற்கனவே பணியாற்றியுள்ள அவர், பிசிசிஐ தலைவராகவும் இருந்துள்ளார்.
இதற்கிடையில், கங்குலியின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு படமும் தயாராகி வருகிறது. அதில் ராஜ்குமார் ராவ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஷ் பிலிம்ஸ் தயாரித்துள்ள காக்கி வெப் சீரிஸ் 2000களின் முற்பகுதியில் வங்காளத்தில் நடந்த குற்றம் மற்றும் ஊழலை ஐபிஎஸ் அதிகாரி அர்ஜுன் மைத்ரா எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.