Page Loader
கிறிஸ்துமஸிற்கு வெளியாகிறதா வெற்றிமாறனின் விடுதலை 2?
வெற்றிமாறனின் விடுதலை 2

கிறிஸ்துமஸிற்கு வெளியாகிறதா வெற்றிமாறனின் விடுதலை 2?

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2024
07:34 pm

செய்தி முன்னோட்டம்

சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்து கடந்தாண்டு வெளியான திரைப்படம் விடுதலை. இப்படத்தின் 2ஆம் பாகத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில், அதைப்பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, வரும் கிறிஸ்துமஸிற்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். வெற்றிமாறன் இயக்கி, இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் விடுதலைப் பகுதி 1 இன் கதையைத் தொடர்ச்சியாகும். பி.ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அழுத்தமான இரண்டு பகுதி கதையாக மாற்றி இயக்கி வருகிறார் வெற்றிமாறன். முதல் பாகத்தில் 'வாத்தியார்' விஜய் சேதுபதியின் அறிமுகத்துடன் படம் நிறைவுற்ற நிலையில், இரண்டாம் பாகத்தில் அவரின் பிளாஷ் பேக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post