காஷ்மீர் ஷெட்யூலில் குழப்பம்: பாதியிலேயே திரும்பிய SK 21 படக்குழு
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்னஷனல் தயாரிக்க, சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிக்கவிருக்கும் திரைப்படம் SK 21. இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் முதல் ஷெட்யூல், காஷ்மீரில் நடைபெறப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. அதற்கேற்றாற் போல, சிவகார்த்திகேயனும் ட்விட்டரில், விமானத்தில் பயணிப்பது போல ஒரு ட்வீட் பகிர்ந்திருந்தார். ஆனால், தற்போது அந்த ஷெட்யூலை பாதியிலேயே முடித்துவிட்டு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு படக்குழுவினர் தள்ளப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. நடைபெறவிருக்கும் G 20 மாநாட்டிற்காக படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு படக்குழுவினர் திரும்புவதாக கூறப்படுகிறது.