
தனுஷ் இயக்கத்தில் SJ சூர்யா; வெளியான ராயன் படத்தின் புது போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மானின் இசையில், தனுஷ் நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'ராயன்'.
இப்படத்தின் முதல் போஸ்டர், 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றது.
பல்வேறு பரிமாணங்களை நடிப்பில் வெளிப்படுத்தும் தனுஷ், இயக்கத்திலும் சோடை போகமாட்டேன் என கூறி எடுத்த வெற்றிப்படம் தான், 'பா.பாண்டி'.
முதிர்ச்சியான ஒரு காதல் கதையை கதைக்களமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது.
அதன் பின்னர் இயக்கத்திற்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ், தன்னுடைய 50வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
இந்த படத்தில் காளிதாஸ், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் மெயின் வில்லனான எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ராயனில் SJ சூர்யா!
Introducing @iam_SJSuryah from the world of #Raayan 💥@dhanushkraja @arrahman @omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss pic.twitter.com/BvldCM8DgR
— Sun Pictures (@sunpictures) February 21, 2024