Page Loader
'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள்
'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள்

'ஜவான்' திரைப்படத்தில் உலகத்தரம் மிக்க 6 சண்டை பயிற்சியாளர்கள்

எழுதியவர் Nivetha P
Aug 22, 2023
07:23 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம் 'ஜவான்'. இதில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத், பிரியாமணி, யோகிபாபு, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் இதில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார், ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்த திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டை 

அதிரடி சண்டைகாட்சிகள் மட்டுமின்றி பரபரப்பான சேஸ்களும் இடம்பெற்றுள்ளதாம் 

இந்நிலையில் இப்படத்தின் சண்டை காட்சிகளை உலகத்தரம் மிக்க சண்டை பயிற்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஸ்ட் அண்ட் பியூரியஸ், கேப்டன் அமெரிக்கா, அவென்ஜர்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படங்களின் சண்டை காட்சிகளை உருவாக்கிய சண்டை பயிற்சியாளர்கள் தான் இதிலும் பணியாற்றியுள்ளார்களாம். அதன்படி யானிக் பென், கிரேக் மேக்ரே, சுனில் ரோட்ரிக்ஸ், கெச்சா கம்பாக்டி, ஸ்பைரோ ரசாடோஸ் மற்றும் அனல் அரசு ஆகியோரே இதிலுள்ள சண்டைக்காட்சிகளை உருவாக்கியுள்ளனர். மேலும், இப்படத்தில் அதிரடி சண்டைகாட்சிகள் மட்டுமின்றி ட்ரக் சேஸ், கார், பைக் சேஸ் உள்ளிட்டவையும் அமைந்துள்ளது என்று கூறப்படுவதால் படத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.