
#அமரன்: சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படத்தின் பெயர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
கமல்ஹாசனின், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள #SK21 திரைப்படத்தின் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'அமரன்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, பிப்ரவரி-17, நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு ராணுவ வீரர் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. உடன் ஹீரோயினாக சாய் பல்லவி நடிக்கிறார்.
இவர்கள் இருவரின் டான்ஸை காண தற்போதே ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இப்படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
இந்த படத்திக்ற்காக சிவகார்த்திகேயன் தீவிர உடற்பயிற்சி செய்துள்ளார் என சமீபத்தில் வைரலாக பகிரப்பட்ட வீடியோ காட்டுகிறது. இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
#SK21 திரைப்படத்தின் பெயர்
“fortitudo et honor”, DRIDHTA AUR VIRTA” loading…#Amaran ▶️ https://t.co/YbpCjWZkJp#HappyBirthdaySK#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #RajkumarPeriasamy
— Raaj Kamal Films International (@RKFI) February 16, 2024
A Film by @Rajkumar_KP @ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh… pic.twitter.com/vhy4GxWNoc