Page Loader
மீண்டும் பழைய படத்தின் டைட்டில்; ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு இதுதான்

மீண்டும் பழைய படத்தின் டைட்டில்; ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு இதுதான்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 17, 2025
01:53 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு மதராஸி என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தர்பார் படத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, முருகதாஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் இயக்கத்திற்குத் திரும்பியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 17) வெளியிடப்பட்டது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுடன் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டீசரில் தெறிக்கும் துப்பாக்கித் தோட்டாக்கள், குண்டு வெடிப்புகள் மற்றும் வன்முறை என ரணகளமாக காட்டப்பட்டுள்ளது.

படத்தின் பெயர்

பழைய படத்தின் பெயர் 

துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த வித்யுத் ஜம்வால், முருகதாஸுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளது பரப்பரப்பைக் கூட்டியுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளிப்பட்டாலும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சுவாரஸ்யமாக, அர்ஜுன் நடித்த படத்திற்கு மதராஸி என்ற தலைப்பு முன்பு பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர்களிடம் இருந்து முறையான அனுமதி பெற்று, இந்த படத்திற்கு அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில் தென்னிந்தியர்களைக் குறிக்க மதராஸி என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் டீசரில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சிறப்பித்துக் காட்டும் வரைபடமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஏ.ஆர்.முருகதாஸின் எக்ஸ் பதிவு