Page Loader
மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது: முதல் பாடல் பிப் 17 வெளியிடப்படும்
மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது

மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ் இன்று வெளியானது: முதல் பாடல் பிப் 17 வெளியிடப்படும்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 15, 2023
07:12 pm

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் அடுத்ததாக 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று அந்த படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டனர் படக்குழுவினர். இப்படத்தின் சிங்கிள் ட்ராக், வரும் பிப்., 17 அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 'மாவீரன்' தமிழ்-தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் படத்தில், அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ஷாந்தி டாக்கிஸ் தயாரிக்கின்றனர். பரத் ஷங்கர் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் சமீபத்தில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் ஒரு பாடலின் படப்பிடிப்பை முடித்தார், எனவும், அதை படமாக்க தயாரிப்பாளர்கள் மோகோபோட் கேமராவைப் பயன்படுத்தியுள்ளனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

மாவீரன் படத்தின் கிலிம்ப்ஸ்