Page Loader
தள்ளிப்போகும் அயலான் ரிலீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி 
தள்ளிப்போகும் அயலான் ரிலீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி

தள்ளிப்போகும் அயலான் ரிலீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2024
10:50 am

செய்தி முன்னோட்டம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவான பேண்டஸி திரைப்படமான 'அயலான்', இந்த பொங்கலுக்கு வெளியாகவில்லை எனவும், அதன் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அது தமிழ் ரிலீஸ் அல்ல, தெலுங்கு ரிலீசிற்கு தான். மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியுள்ள அயலான் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், இஷா கோபிகர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.

card 2

தில் ராஜு வெளியீடு 

பொங்கல் பண்டிகை, விடுமுறையை முன்னிட்டு, ஆந்திராவில் பல படங்கள் வெளியாகவுள்ளது. ஆந்திராவில் பிரபல டிஸ்ட்ரிபியூட்டரான தில் ராஜு, ஒரு இயக்குனரும் கூட. ஆந்திராவில், தில் ராஜுவின் கட்டுப்பாட்டில் நிறைய திரையரங்குகள் இருக்கின்றன. சமீப காலமாக அவர் தமிழ் படங்கள் அதிகம் வாங்கி விநியோகிக்கிறார். எனினும், அவருக்கும் தெலுங்கு சினிமாவில் உள்ளவர்களுக்கும் சிறிய ஊடல் இருப்பதாக பேச்சு. அதனாலேயே, தெலுங்கு படங்களின் திரையிடலை தடுக்கவே, அவர் தமிழ் திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த நிலையில், தான் அயலான் படத்தின் தெலுங்கு வெர்ஷனை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவில்லை என அறிவித்துள்ளார் தில் ராஜு. மற்ற படங்களின் வெளியீடுகளை நான் தடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.