LOADING...
படப்பிடிப்பு நிறைவு; தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புது அப்டேட்
தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புது அப்டேட்

படப்பிடிப்பு நிறைவு; தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புது அப்டேட்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 20, 2025
08:03 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் ரவி மோகன், ஆதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், பராசக்தி மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தத் திரைப்படம் இந்தி எதிர்ப்பை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், படக்குழுவினர் தீபாவளியை முன்னிட்டு, படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தீபாவளி வாழ்த்து

ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து

படப்பிடிப்பு முடிந்ததைக் கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோவைப் படக்குழு வெளியிட்டு, ரசிகர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டப் பணிகளான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பராசக்தி திரைப்படம், வரும் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. குறிப்பாக, இந்தப் பொங்கல் வெளியீட்டில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம், நடிகர் விஜயின் ஜன நாயகன் திரைப்படத்துடன் நேரடிப் போட்டியில் களமிறங்குகிறது. மேலும், சூர்யாவின் கருப்பு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post