Page Loader
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?
புஷ்கர் - காயத்ரி தங்களது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளனர்

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2025
04:28 pm

செய்தி முன்னோட்டம்

'விக்ரம் வேதா' புகழ் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி தங்களது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த புதிய முயற்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'விக்ரம் வேதா' (2017) திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு பிறகு இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி பெரும்பாலும் தயாரிப்பிலும், 'சுழல்' போன்ற வெப்சீரிஸ்கள் போன்ற புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர். தற்போது, தங்களது நேரடி திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் மீண்டும் களமிறங்கும் நிலையில், சிவகார்த்திகேயனுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன என தகவல். இந்த கூட்டணி உறுதியாகுமா என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையிலேயே தெளிவாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய படங்கள்

சிவகார்த்திகேயனின் தற்போதைய படங்கள்

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி', மற்றும் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படங்களில் நடித்து வருகிறார். இவற்றுக்கு பின்னர், 'குட் நைட்' இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்திலும் நடிக்க அவர் தேதிகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் புதிய கூட்டணியும் உறுதியாகி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு மிக அதிகம் எனக் கூறப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் இதற்காக காத்திருக்கின்றனர்.