Page Loader
"அந்த நடிகை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை": நடிகை சிம்ரனின் மறைமுக விமர்சனம் யாருக்கு?
நடிகை சிம்ரனின் மறைமுக விமர்சனம் யாருக்கு?

"அந்த நடிகை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை": நடிகை சிம்ரனின் மறைமுக விமர்சனம் யாருக்கு?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2025
11:27 am

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியாவின் பிரபல நடிகை சிம்ரன், சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் பேசும் போது, ஒரு சக நடிகையை மறைமுகமாக கடுமையாக விமர்சித்தது தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் யாரை குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பதும் தற்போது விவாத பொருளாகி உள்ளது. இணையவாசிகள் பலரும் இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ என யூகங்கள் மூலம் பரபரப்பை தூண்டியுள்ளனர். இந்த நிலையில், இந்த சர்ச்சை என்ன? சிம்ரன் பேசியது என்ன? யாரை குறிப்பிட்டிருப்பார் என்பது குறித்து விரிவாக பாப்போம்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சிம்ரனின் பேச்சு

சிம்ரன் பேசியது விவாத பொருள் ஆனது ஏன்?

"என் சக நடிகை ஒருவரிடம் சமீபத்தில் ஒரு மெசேஜ் அனுப்பினேன். ஒரு கதாபாத்திரத்தில் அவரை பார்த்ததில் ஆச்சரியமாக இருந்தது என்று தெரிவித்தேன். அதற்கு அவர் 'ஆன்ட்டி ரோல்களில் நடிப்பதைவிட இது பரவாயில்லை' என்று பதிலளித்தார். அந்த பதில் மிகவும் பொறுப்பற்றது". "அதுபோன்ற பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. 'ஆன்ட்டி' ரோல்களில் நடிப்பதில் தவறில்லை. 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில், 25 வயதில் அம்மா வேடத்தில் நடித்துள்ளேன். இது 'டப்பா' கதாபாத்திரங்களுக்கு மேல். நமக்கென்று நம்முடைய தேர்வுகளில் நம்பிக்கை இருக்க வேண்டும்." என்று சிம்ரன் கூறினார்.

யார்?

சிம்ரன் குறிப்பிடும் அந்த நடிகை யார்? 

சிம்ரன் குறிப்பிட்டுள்ள நடிகை யார் என்ற விவகாரம் தற்போது X (முந்தைய ட்விட்டர்) தளத்தில் விவாதமாகி வருகிறது. பலரும் அந்த நடிகை ஜோதிகாவாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டு வருகின்றனர். ஒரு சிலர் அது திரிஷா எனவும், லைலா எனவும் குறிப்பிடுகின்றனர். சமீபத்தில் திரிஷா மற்றும் சிம்ரன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்திருந்தனர். அதேபோல லைலா மற்றும் சிம்ரன் இணைந்து 'சப்தம்' என்ற படத்தில் நடித்திருந்தனர்.

என்ன காரணம்?

இணையவாசிகள் இவர்களின் பெயர்களை குறிப்பிட என்ன காரணம்?

நடிகை ஜோதிகா சமீபத்தில் ஹிந்தியில் வெளியான 'டப்பா கார்டெல்' வெப் தொடரில் நடித்திருந்தார். அதன் ப்ரோமோஷன் பேட்டியில் தென்னிந்திய சினிமாவை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில், சிம்ரனின் கருத்துக்கள் ஜோதிகாவை நோக்கி இருக்கலாம் என ரசிகர்கள் ஊகிக்கின்றனர். அதே வேளையில் லைலாவிற்கும், சிம்ரனுக்கு சப்தம் படப்பிடிப்பின் போது மோதல் வெடித்ததாகவும், அதன் வெளிப்பாடு தான் இந்த விமர்சனம் எனவும் கூறுகின்றனர் ஒரு சில தரப்பினர். இது தொடர்பாக X தளத்தில் #Simran மற்றும் #Jyotika என்ற ஹேஷ்டேக்குகள் வைரலாக பரவி வருகின்றன.