
Thug Life: மே 8 அன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
'தக் லைஃப்' படத்தில் ஏற்கனவே துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் கால்ஷீட் பிரச்னை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி வெளியேறியதாக கூறப்பட்டது.
அதற்கு பதிலாக நடிகர் சிம்பு படத்தில் இணைவதாக செய்திகள் கசிந்தன.
எனினும் இது பற்றிய அறிவிப்பு எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில், இன்று காலை முதல் இணையத்தில், சிம்பு-கமல் இருவரும் வித்தியாசமான கெட்டப்பில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின.
இந்த நிலையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், கமலின் RKFI நிறுவனமும், தக் லைஃப் படத்தில் புதிய நபர் இணைந்துள்ளதாகவும், இது பற்றிய அறிவிப்பு மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
embed
தக் லைஃப் அப்டேட்
Gear up for a Wild Ride! A New Thug in Town Arrives on May 8th#Ulaganayagan #KamalHaasan #NewThugInTown @ikamalhaasan #ManiRatnam @arrahman #Mahendran @bagapath @trishtrashers @abhiramiact #Nasser @C_I_N_E_M_A_A @AishuL_ @MShenbagamoort3 @RKFI @MadrasTalkies_... pic.twitter.com/7D1JKSTANH— Raaj Kamal Films International (@RKFI) May 6, 2024