ஸ்ருதி ஹாசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
நடிகர் கமல்ஹாசன்- நடிகை சரிகாவின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். பன்முக திறமைகொண்ட நடிகை ஸ்ருதி ஹாசனின் 37 வது பிறந்தாளான இன்று, அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ: சென்னையில் பிறந்த ஸ்ருதி ஹாசன், லேடி ஆண்டாள் பள்ளியில் தனது ஆரம்ப கால படிப்பை படிப்பை முடித்தார். கல்லூரி படிப்பை மும்பையில் தொடர்ந்த அவர், இசை சம்மந்தப்பட்ட மேற்படிப்பை காலிஃபோர்னியாவில் படித்துள்ளார். படிக்கும் போதே, பல இசை ஆல்பங்களை, தனது இசை குழுவுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நடித்த தேவர் மகன் படம் தான், ஸ்ருதி ஹாசனின் இசை பயணத்தின் தொடக்கம். இசை படிப்பில் தேர்ச்சி அடைந்ததும், கமலின் உன்னைபோல் ஒருவன் படத்திற்கு இசை அமைத்தார், ஸ்ருதி.
பல பாஷைகளை அறிந்த ஸ்ருதி
'லக்' என்ற ஹிந்தி படத்தின் மூலம், நடிப்பு துறையில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தெலுங்கு படவுலகிற்கு தாவினார். சித்தார்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் என பலருடன் நடித்துள்ளார். தமிழில் சூர்யா நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் வெளியான, '7 ஆம் அறிவு' படம் மூலம் அறிமுகம் ஆனார். ஸ்ருதி ஹாசனுக்கு, 8 பாஷைகள் பேசவும், படிக்கவும் தெரியும். தசாவதாரம் படத்திற்கு, கமல் ஏற்ற அமெரிக்கா ஜனாதிபதி கதாபாத்திரத்திற்கு, கமலுக்கு அமெரிக்கா உச்சரிப்பு ஆங்கிலத்தை பயிற்றுவித்தவர் ஸ்ருதி தான், என கமலே கூறியுள்ளார். தானும், மன அழுத்தத்தில் பாதிக்கபட்டதாகவும், அதனால் தான் எதிர்கொண்ட கஷ்டங்களை பற்றியும், சமீபத்தில் கூறியிருந்தார். இசையின் மேல் இருக்கும் பிரியத்தினால், தனது பெயரான 'ஷ்ருதி' என்பதை டாட்டூ இட்டுள்ளார்.