Page Loader
சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு

சமந்தா நடிக்கும் சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14 வெளியீடு

எழுதியவர் Venkatalakshmi V
Feb 10, 2023
02:30 pm

செய்தி முன்னோட்டம்

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்கள். இந்த மாதம் வெளியாகவேண்டிய இத்திரைப்படம், என்ன காரணத்தினாலோ, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, அப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வழங்கியுள்ளனர். அதன்படி, ஏப்ரல் 14 -ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. கவி காளிதாசரின் படைப்பான 'சகுந்தலை' நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'சாகுந்தலம்' படத்தில், நாயகியாக சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்த மகாராஜா கதாபாத்திரத்தில், தேவ் மோகன் என்பவர் நடித்துள்ளார். இளவரசன் பாரதனாக, அல்லு அர்ஜுனின் மகள், அல்லு ஆர்ஹா நடித்துள்ளார். 3D வடிவில் உருவாகியுள்ள இந்த படம், தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும், ஹிந்தியிலும் எடுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சாகுந்தலம் ரிலீஸ்